Dalit Elumalai was Brutally Attack by caste hindus (Code: TN-VLP-2021-156, Date: 28-Dec-2021 )

Back to search

Case Title

Case primary details

Case posted by Social Awareness Society for Youths-SASY
Case code TN-VLP-2021-156
Case year 28-Dec-2021
Type of atrocity SC/ST (POA) Act
Whether the case is being followed in the court or not? No

Fact Finding

Fact finding date

Fact finding date Not recorded

Case Incident

Case Incident details

Case incident date 28-Dec-2021
Place Village: Not recorded
Taluka:Not recorded
District: Villupuram(DP)
State: Tamil Nadu
Police station Anandapuram
Complaint date 29-Dec-2021
FIR date 29-Dec-2021

Case brief

Case summary

நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகின்றேன். நான் பட்டியல் சாதியான இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கு திருமணமாகி மனைவியின் பெயர் சரண்யா(28), மகன்கள் கவின்(06), ரட்சன்(05) என இரண்டு மகன்கள் உள்ளன. நான் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் (NRGEA) பணிதள பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறேன் மற்றும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றேன். என்னுடைய தந்தை ராசார்(73) என்பவர் என்னுடன் இருந்து வருகின்றார். இதுவே என் குடும்ப விபரமாகும்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணி தள பொறுப்பாளராக நான், எங்கள் பகுதியைச் சேர்ந்த ஷகிலா(29) க/பெ ராஜ்குமார் என்பவரும், சாதி இந்துவான வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பெரியநாயகி(44) க/பெ உதயகுமார், ஏழுமலை(30) தஃபெ தண்டபாணி ஆகிய மூவரும் மேற்படி பொறுப்பாளராக வேலை செய்து வருகின்றோம்.; 100 - நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் பணம் வைப்பு தொகை வராமல் இருந்தால், கிராம ஊராட்சி எழுத்தர் சசி குமார் என்பவர் பயனாளிகளிடம் 500/- ரூபாய் பெற்றுக் கொண்டு, வங்கி கணக்கில் பயனாளிகளின் பணத்தை ஏற்றுவதாக கூறி மோசடி செய்தார். நான் மேற்படி பயனாளிகளிடம் பணம் பெற்று, வங்கி கணக்கில் ஏற்றுவதாக கூறியதை நான் இப்படியெல்லாம் மோசடி செய்யவேண்டும் என்று கூறியதால்; எனக்கும், மேற்படி கிராம ஊராட்சி எழுத்தர் சசிகுமார் த/பெ ரங்கநாதன் என்பவருக்கும் முன்விரோததால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக என்னை பணிநீக்கம் செய்துவிட்டார்.
இந்நிலையில் 28.12.2021 அன்று மாலை சுமார் 08.30 மணியளவில் ஊராட்சி தலைவர் திரு.அண்ணாதுரை த/பெ சீத்தாராமன் என்பவர் தொலைபேசியின் மூலமாக என்னை பயனாளி அட்டை (Job Card) எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருமாறு கூறினார். அன்று மாலை சுமார் 03.30 மணியளவில் மேற்படி கிராம ஊராட்சி தலைவரின் வீட்டிற்கு சென்று வேலையினை மீண்டும் போடச் சொல்லி முறையிட்டார். அப்போது மேற்படி கிராம ஊராட்சி எழுத்தர் சசிகுமார் தஃபெ ரங்கநாதன் என்பவர் என்னை பார்த்து பறைத் தேவிடியா பையா உனக்கு மீண்டும் வேலை செய்ய விடமாட்டேன், ‘ஓழுங்கா இங்கிருந்து ஓடிப்போடா என்று அசிங்கமாகவும், சாதி பெயரைச் சொல்லி, கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனைப் பார்த்துக்; கொண்டிருந்த கல்பனா(31) க/பெ வைரவன், மணிகண்டன் த/பெ சிவராசு, தாட்சாயிணி த/பெ மணிகண்டன், பிரேம்நாத் த/பெ மேகநாதன், வைத்தீஸ்வரன் த/பெ காசிநாதன், சந்திரா க/பெ குண்டு, சகிலா த/பெ சுப்பக்கவுண்டர், குமாரி க/பெ கொய்யப்பழம் குமார் மற்றும் சிலரும் சேர்ந்துக் கொண்டு, பறைத் தேவிடியா பையா ஊருக்குள்ள வந்து ஊர்க்காரர்களிடம் பிரச்சனை செய்கிறாய்” உனக்கு எங்கிருந்துடா எவ்வளவு திமிரு உன்னை கொலை செய்யாமல் விடமாட்டோம் என்று என்னை பலமாக தாக்கினார்கள். அப்போது என் மனைவி சரண்யா பக்கத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தவள் நான் அடிவாங்கும்போது அலறிய சத்தம் கேட்டு என் மனைவி வந்து அய்யோ என் கணவரை விட்டுவிடுங்கள் என்று கதறிய பிறகு தான் விட்டு சென்றார்கள்.
அதன்பிறகு அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் என் மனைவி சரண்யா, நான் பலத்த காயமடைந்து இருப்பதால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்hக பனைமலைபேட்டை கிராமத்தில் பஸ்க்காக காத்திருக்கும் போது அனந்தபுரம் காவல்நிலைய காவலர்கள் வந்து என்னை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். மறுநாள் 29.12.2021 அன்று மாலை சுமார் 7.00 மணியளவில் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொரனா பரிசோதனை செய்துக் கொண்டு, அன்று இரவே என்னை செஞ்சியில் உள்ள சிறையில் அடைத்தனர். என் தந்தை கொடுத்த ராசார் கொடுத்த புகாரின் அடிப்படையில் Cr.No:517/2021 U/s:147,294(b),323,506(i) – IPC, r/w:3(1)(r), 3(1)(S), 3(2)(Va) – SC/ST Act - 2015 வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கிராம ஊராட்சி எழுத்தர் திரு.சசிகுமார் த/பெ ரங்கநாதன் என்பவரை மட்டும் கைது செய்துள்ளார்.

Total Visitors : 6558698
© All rights Reserved - Atrocity Tracking and Monitoring System (ATM)
Website is Managed & Supported by Swadhikar