Total records:1268

Dalit Peoples were Denied temple entry at Melpathi of Villupluram District

    விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் வன்னியர் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் ஒன்பதாம் நாள் திருவிழாவான 2023 ஏப்ரல் 7 ந் தேதி அன்று, தலித் இளைஞர் கதிரவன் (24) த/பெ கந்தன் கோவிலுக்குள் சென்று வழிபட முயன்றுள்ளார். வன்னியர் சமூகத்தினர் தடுத்தி நிறுத்தியுள்ளனர். அப்போது பெறும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் அவ்விடத்திற்கு வந்துள்ளார். அவர் கதிரவணை பார்த்து, ‘’நீங்களாம் கோவிலுக்குள் வரக்கூடாதுன்னு இருக்கே.. இப்ப ஏன் பிரச்சனை பன்ற.. வீட்டிற்கு போ.. பிறகு பேசிக்கொள்ளலாம்” என கூறிவிட்டு சென்றுள்ளார். தகவல் அறிந்த வன்னியர் சமூகத்தினர் பெரும் கூட்டமாக கோவிலில் கூடியுள்ளனர். அப்போது, கதிரவன் தனது தந்தை கந்தனுக்கு கைபேசி மூலம் பேசி தகவலை கூறியுள்ளார். அங்கு வந்த கதிரவனையும், அவரது பெற்றோரையும் வன்னியர் சமூகத்தினர் தாக்கியுள்ளனர். அவரது உறவினர் சேகர் என்பவர், கதிரவனைக் காப்பாற்றி இழுத்துக்கொண்டு தலித் பகுதிக்குள் ஓடியுள்ளனர். அதுவரை வன்னியர் சமூகத்தினர் விரட்டி சென்றுள்ளனர். கதிரவன் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யக்கோரி தலித் மக்கள் அன்றிரவே சென்னை - கும்பக்கோணம் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று பேசுவார்த்தை நடத்தி புகாரை பெற்றுள்ளார். அதன்பிறகு மக்கள் வீடு திரும்பியுள்ளனர். இச்சம்பவம் ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவவே மாவட்ட நிர்வாகம் இரு தரப்பினரையும் அழைத்து தொடந்து 7 முறைக்கு மேல் சமாதனக் கூட்டம் நடத்தியுள்ளது. அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தை அரசியல் கட்சியினர், பல்வேறு இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு தலித் மக்களை அழைத்துக்கொண்டு கோவில் நுழைவு போராட்டம் அறிவித்ததால் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்கு கோட்டாட்சியர் பூட்டு போட்டு சீல் வைத்துள்ளனர். 


    மாவட்ட நிர்வாகமும், வருவாய் துறையும் இரு தரப்பினரையும் அழைத்து தொடந்து 7 முறைக்கு மேல் சமாதன கூட்டம் நடத்தியது. அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தை அரசியல் கட்சியினர், பல்வேறு இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு தலித் மக்களை அழைத்துக்கொண்டு கோவில் நுழைவு போராட்டம் அறிவித்ததால் மேல்பாதி துரௌபதி அம்மன் கோவிலுக்கு வருவாய் துறையினர் பூட்டு போட்டு சீல் வைத்துள்ளனர்.


    இச்சம்பவம் குறித்து தலித் மக்கள் ஏப்ரல் 7 ந் தேதி இரவு சாலை மறியல் செய்ததால் வளவனூர் காவல் நிலையத்தில் கு.எண். 177/2023 பிரிவு 143, 341, 188 ன் கீழ் 32 ஆண்கள், 18 பெண்கள் உள்பட 60 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


    தலித் இளைஞர் கதிரவனை தாக்கியதால் கதிரவன் அக்கா கனிமொழி கொடுத்த புகாரின் மீது கு.எண். 178/2023 பிரிவு 147,148,294(b), 341, 323, 324, 354, 153A(2), 504, 506(1), 3(1)(r), 3(1)(s), 3(1)(w)(1), 3(1)(za)(c), 3(2)(va) SC/St (PREVENTION OF ATROCITIES) ACT 1989 ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


    வன்னியர் சமூகத்தினர் கதிரவன் மீது கொடுத்த புகாரில் கதிரவன் மீது ஒரு வழக்கும், சாலை மறியலில் ஈடுபட்டதால் தலித் மக்கள் மீது ஒரு வழக்கும், வன்னியர் சமூகத்தினர் கோவிலின் வாயிலில் போராட்டத்தின் போது தற்கொலைக்கு முயற்சித்ததால் தனி, தனி நபர்கள் மீது இரு வழக்கும் பதிவு செய்துள்ளனர். இதுவரை இரு தரப்பிலும் யாரையும் கைது செய்யவில்லை. மேல்பாதி கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட போலிசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர்.   

  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: 01-06-2023
  • Date of Case Upload: 17-11-2023


Files

1) FF Report 
2) complaint Copy 
3) FIR Copy 
4) News Clipping 

A Dalit girl sexually harassed by a Headmaster in Vitalapuram, Tindivanam

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள விட்லாபுரம் கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தைச் மோகனா, அன்றாட விவசாயக் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். இவரது கணவர் ஹரிதாஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 பெண் 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.


    இதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 84 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒரு பெண் ஆசிரியர் மற்றும் ஒரு தலைமை ஆசிரியர் உட்பபட மொத்தம் 5  ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.


    மோகனாவின் இரண்டு மகள்களும் விட்லாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியல் பயின்று வருகிறார்கள்.  இதில் மூத்த மகள் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 9-ம் வகுப்பும், அடுத்த மகள் 6-ஆம் வகுப்பும் படிக்கின்றனர்.


    இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10, 2023 அன்று அப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர், அவரது பிறந்த நாளுக்காக, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்பு  சாக்லெட்  கொடுத்துள்ளார்.  இந்த சாக்லெட்டை தலைமை ஆசிரியர் மாணவி சாந்தியின் உடலைத் தொட்டு, தடவி கட்டாயப்படுத்திக் கொடுத்துள்ளார்.  இச்சம்பவத்தை பற்றி வகுப்பு ஆசிரியர் ஹேமலதா-விடம் அம்மாணவி கூறியுள்ளார்.  அதற்கு அந்த பெண் ஆசிரியர், ‘’வீட்டில் யாரிடமும் சொல்ல கூடாது.. சொன்னால்.. உன்னைத்தான் திட்டுவார்கள், அடிப்பார்கள்” என்று கூறி  மிரட்டியுள்ளார்.


    தொடர்ந்து தலைமை ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்து வந்ததால், அம்மாணவி, பள்ளியில் உள்ள அறிவியல் ஆசிரியரிடம் சொல்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அதனைப் பார்த்த தலைமை ஆசிரியர், கையில் பிரம்பினை எடுத்துக்கொண்டு, மாணவர்களை அடக்குவது போன்று, அடிப்பது போன்று பிரம்பினை ஆட்டி மிரட்டிக்கொண்டே வேகவேகமாக வந்துள்ளார். இதனைப் பார்த்த மாணவி அந்த ஆசிரியரிடம் எதுவும் சொல்லாமல் சென்றுள்ளார்.


    இந்நிலையில், கடந்த 20.04.2023 அன்று பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே இருந்துள்ளார். பிற ஆசிரியர்கள் அனைவரும் 10-வகுப்பு தேர்வு கண்காணிப்பாளராக சென்றுள்ளனர். வருகைப் பதிவேட்டை கொடுக்க அலுவலகம் சென்ற மாணவி சாந்தியை மேற்படி தலைமை ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்து, தொல்லை கொடுத்துள்ளார். சற்றும் எதிர்பார்க்காத மாணவி சத்தம் போட்டுக் கத்தி, வெளியில் ஓடி வந்துள்ளார்.


    மறுநாள் 21.04.2023 அன்று இச்சம்பவத்தை தனது சக தோழியிடம் சாந்தி கூறி அழுதுள்ளார்.  அவர் மூலமாக பெற்றோர் மற்றும் ஊர் மக்களுக்கு தகவல் தெரிந்து, அனைவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். தகவலறிந்த திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இரவு 7 மணியளவில், தலைமை ஆசிரியரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.


    அன்றே, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கு.எண்: 14/2023 u/s 342, 354A IPC r/w 9(t), 10 POCSO Act 2012, 3(1)(w)(i), 3(2)(va) SC/ST PoA Act 1989 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: 25-04-2023
  • Date of Case Upload: 15-11-2023


Files

1) FIR Copy 
2) Fact Finding Report 
3) Complaint Copy 

Dominate people attack Dalit Family in Kempadenahalli village, Chinthamani taluk, Chikkaballapura district

    Chikkaballapura District, Chinthamani Taluk, Kempadenahalli Village here lived schedule caste holeya community belongs Ananad 45 years his wife Rathnamma 38 years and this couple has 3 male and 1 female children. second son Yashvanth is studding in 9th standard and on this day he had played with his friends and evening he had come back home and after his dinner he had slept. our same village OBC same village kuruba community belongs Nagaraju and his wife Ambika making a ground of same community around 9;30 at night came to Rathanamma house she was washing vessels in front of her house in the group Nagaraju s/o Venkataramappa-38, his wife Ambika 28 Narayanaswamy s/o Venkataramappa 47, Naveen s/o Srinivasappa 25, Heeresh s/o Late Venkatesh 22, Doddegowda s/o Muninarayanappa 36, Meenedasappa s/o Nagaraju 35, Pece Manju s/o Munivenkatappa 42, Narayanaswamy s/o Sayimanna 50 Years came and asked for my son for that i told them he is sleeping inside soon they entered inside the house and pulling him till the middle of the village near milk dairy and have tied him to the electrics pole i asked them why are you taking my son Nagaraju had pushed her and have taken Yashvanth.
    Rathnamma after getting up she went to the place her son Yashvanth had been tiedby the time she goes there they had been forcing him saying you have been theft my 4 years daughter year hangings and where have you kept it he told them not taken it even though they have tortured him, his parents were reuesting them to leave, they have been telling your son has been stolen my daughter year hangings tell him to say where he had kept it we will leave him and they have beaten them also Rathnammas had were bleeding, before last one time they had clash with us on land matter, Nagaraju had asked Anand to give his land to him and saying you are doing cooly so you donnt need land andillegally he had been taken land from him, now they are saying your son had been stolen mydaughter gold if you give land we will compromise otherwise we will give complaint on your son.
    this incident case has been filed at Chinthamani police station on 30-09-2022 and the crime number is 375/2022 IPC 1860 u/s 149, 147, 323, 354, 355, 341, 448, 504, 506, 149 and sc/st (POA) Amendment Act-2015 u/s 3(1)(r), 3(1)(s), 3(1)(z) has been filed. on 30-09-2022 and the complaint on is Crime No 377/2022, IPC 1860 u/s 379, 369, 504, 506 r/w 34 has been filed.
  • Posted by: National Dalit Movement For Justice - NDMJ Karnataka
  • Fact finding date: 07-10-2022
  • Date of Case Upload: 11-11-2023

Social Boycott, in Ullerahalli Village, Tekal Hobali, Maluru Taluk, Kolara District

    Kolara District, Malur taluk, Tekal Hobli, Hullerahalli illage, here lived schedule caste Adikarnataka Community Belongs Ramesh-45 and Wie Shobha 35 years, his mother Rathnamma 65 years and this couple son Chethan 15 years, there was a procession o village goddesses Bookamma Dei on 08-09-2022 night around 8;30 whileon procession i people comes or pooja they use to stop palanquni which had been Deistatue with a handled stick. going on this procession it comes near another temple in the village which is Babaiah temple and it stops near it and again they gives handled stick and stands the planing and the 4 peple who were holding palaning were sitting taking rest. theschedule caste community belongs Chethan and come to see the procession and ater that he had adored the godess and while he was back he absorbers that one o the palaning handled stick were alling seeing that he corrects that stick, seeing this the leader o other caste o schedule case Narayanaswamy, Venkatappa, Koteyappa, Chalapathi, Mohanrao, and Channaiah scolds Chethan saying you low caste ellow how did you touch the palanquin you son o bitch you hae spoiled it and have beaten him by sticks and legs o them by that time he escaped rom them and run away to the home.
    The next day on 09-09-2022 all the leaders of the village gather and discuss about what happened in the night and this low caste boy had been touched the stick and have spoiled it so they calls Chethan parents and says pay pennalty of ruppes 60.000/-( Sixty thousand) to clear, his parents were very poor so they says we cant pay that much we can give 5,000/-(Five Thousand) for that they rashes on them that other 55,000/- will your father give and they scolds on caste, you have to give 60,000/- rupees on 01-10-2022 other wise your family has to go out of the village, and the have threatened them if you say this to anyone we will do the same happened in Kambalapalli we will put your family in a house and will burn you live, the same day they say is the money is ready the tim is coming near and they were forcing them you must give, somehow Chethan father and mother contacts Jai Bheem TV in TV Media this subject Dalit leaders and forums seeing this they give compaint.
    This incident case has been filed at 20-09-2022 at Masthi police station and the crime number-79/2022 IPC 1860 U/S 143, 147, 148, 324, 504, 506, 149 and SC/ST(POA) Amendment Act-2015 U/S 3(1)(r), 3(1)(s), 3(1)(a), 3(1)(c), 3(1)(Z), 3(1)(zc) has been added.
  • Posted by: National Dalit Movement For Justice - NDMJ Karnataka
  • Fact finding date: 07-10-2022
  • Date of Case Upload: 09-11-2023

Hindu Swami ji Sexual harassing In Sri Muruga Rajendra Matta Chitradhurga District

    Case details is not available
  • Posted by: National Dalit Movement For Justice - NDMJ Karnataka
  • Fact finding date: 15-09-2022
  • Date of Case Upload: 09-11-2023

Total Visitors : 6280423
© All rights Reserved - Atrocity Tracking and Monitoring System (ATM)
Website is Managed & Supported by Swadhikar